முதன்முதலாய் பார்த்த போதே மெய்மறந்து போனேன் உன் பார்வை பட்டவுடன் உயிர்த்தெழுந்து வந்தேன் உன் நிழலைத் தீண்டையிலே உடல் சிலிர்த்து நின்றேன் இறக்கையில்லா தேவதையை இன்று நானும் கண்டேன் ......
ஈருயிர் கலந்து ஓருயிர் மலர பத்துத் திங்கள் யுகமென கழிய பூக்களின் வண்ணம் கொண்டு வந்தாயே எங்களிடம் வரமாய் பூவுலகிலே கால்பதித்த உன்னுடன் நானும் பிறந்தேனே தந்தையாய்....!!!!