Saturday, September 28, 2013

இறக்கையில்லா தேவதை

முதன்முதலாய் பார்த்த போதே
மெய்மறந்து போனேன்
உன் பார்வை பட்டவுடன்
உயிர்த்தெழுந்து வந்தேன்
உன் நிழலைத் தீண்டையிலே
உடல் சிலிர்த்து நின்றேன்
இறக்கையில்லா தேவதையை
இன்று நானும் கண்டேன் ......

நிலவின் மேல் காதல்

மேகத்தினுள் மறையும்
முழு நிலவே
ஆண்மகன் கண்பட
அரும்பியது நாணமோ
காக்கும் மேகங்களிடம்
காதலன் நானென்று
சொல்வாயோ வெண்மதியே !!!

Wednesday, September 18, 2013

அதரத்தின் தடம்

கரைதனை முத்தமிடும்
கடல் அலையே
நுரைதனை நிலத்தில்
நீக்கிச் சென்றாயே
அதரத்தின் தடமென்று
அனைவரும் அறியவோ !!!!!

Thursday, September 12, 2013

குரு தட்சணை

வியாபாரமாய் மாறிய
வழிகாட்டும் அறப்பணியில்
தன்னலம் பாராது
பிறர்நலம் பேண
எளியோர்களின் வாழ்வில்
ஏணிப்படிகளாய் விளங்கும்
ஆசிரியர்தம் பொற்பாதங்களை
அடிபணிவோம் நாமே !!!

இலவசம்

உருவானது உதவிக்கரமாய்
உருமாறியது அரசியலாய்
- இலவசம்