Friday, June 8, 2012

இருளில் ஒளி

கார்த்திகை மாத
காரிருள் வேளையில்
உள்ளங்கை தனில்
விளக்கினை ஏந்தி
கடந்து சென்றவளை
கடைக்கண் பார்வையிட
இமைகள் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க
சுடர்விட்டு தெரிந்தாள்
தீபஒளியில் என்னவள் !!!!


Friday, January 6, 2012

தாலாட்டு

இரவின் மடியில்
இடைநில்லாப் பயணத்தில்
உடநெங்கும் வந்தாள்
உயிர்த்தோழி நிலவானவள்...
மெல்லிய காற்று முகத்தினை வருட
மெய்மறந்து கண்கள் சொருகி
இன்பமுற்றேன் நான்
இயற்கை அன்னையின் தாலாட்டில்....!!