Wednesday, November 4, 2009

அழகு

மேகங்கள் சூழ்ந்த மலை

மழைத் துளியில் துளிர்ந்து நிற்கும் இலைகள்

மலர்ந்து நிற்கும் மொட்டுகள்

இவற்றைக் கண்டு மெய்மறந்தேன்

உன்னைக் கண்டு உயிர்தெழுந்தேன்..!!!

என்னுள் உருவானது போராட்டம்

யார் அழகு என்று...???

சுனாமி

உயர்ந்து வந்தவனின்
உயிர் வேட்டை
- சுனாமி

Monday, August 17, 2009

எந்தன் தேவதை...

கண்டதும் காதலில்
மயங்கி விழ
கவிதைகள் என்னுள்
ஊற்றாய் எழ - அன்பே
எப்போது அறிவாய்
எந்தன் காதலை - நீ
கனவில் தோன்றிய
எந்தன் தேவதை.....!!!

Monday, May 4, 2009

என்னவளே....

என் இதயத்தைக் களவாடும்
என் இனிய கள்ளியே....!!!
உன் கடைக்கண் பார்வையால்
என்னைக் கணப்பொழுதில் பாதித்தாயே...!!
என் நெஞ்சில் குடியிருக்கும்
இதயத் தாமரையே....
என்னோடு வாழப்போவது எப்போது...?? - என்றும்
என் வாழ்க்கை உன்னோடு....!!!!!!!

Tuesday, April 28, 2009

என்னவளைத் தேடி.....

எழுத்துக்களைச் சிதைத்து
என் இதயத்தை வரைந்தேன்...
அதில் வாழப்போவது யார் - அறியாமல்
தவிக்கிறேனே அவளைத் தரிசிப்பேனா....??
இந்த அறியாச் சுமையும்
இனம் புரியா சுகம்தான்.....

ஹைக்கூ

சுகமான உலகத்தில்
சுமையான தாலாட்டு
- நிலநடுக்கம்